கடந்த நான்கு மாத காலத்துக்குள் 25 அரசாங்க அதிகாரிகள் கைது!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலத்துக்குள் மட்டும் 25 அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ அறிக்கையில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 ஜனவரி 01 முதல் 2026 ஏப்ரல் 30 வரையிலான தனது மீளாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், இலஞ்சம் வாங்கியது தொடர்பாக இருபத்தைந்து அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கைது
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, இலஞ்சம் தொடர்பான 3,349 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் குறித்த காலகட்டத்தில் இலஞ்ச சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில், 51 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும்14 பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 இலஞ்ச வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்குகளின் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 1.9 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam