உள்ளூராட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறிய 25 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் 25 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே போன்று தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
முறைப்பாடுகளின் எண்ணிக்கை
நேற்றைய(23) நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 23 வாகனங்கள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri