வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோவிலின் 24ஆவது மகோற்சவப் பெருவிழா
லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் கோவில் 24ஆவது மகோற்சவப் பெருவிழா 11.08.2025 திங்கட்கிழமை முதல் 27.08.2025 புதன்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த ஆலயம் தொடங்கி இரண்டு கும்பாபிஷேகங்கள் நிறைவேறி பல உற்சவங்கள், விழாக்கள் மற்றும் விரதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்தில் பல அடியார்கள் வந்து தமது பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாதந்தோறும் சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம் காயத்திரி உற்சவம் மற்றும் வசந்த நவராத்திரி, தீபதுர்கா ஹோமம், அம்மன் இலட்சார்ச்சனை, பிள்ளையார் கதை போன்ற பல விழாக்களுடன் பொதுவான விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
பிரார்த்தனை
இறைவனின் அலங்காரக் காட்சிகள் மற்றும் தீப ஆராதனை மூலமாக கண் வழியாகவும் பஜனை மற்றும் அரோஹரா போன்ற ஒ வடிவங்களால் வாக்கு மூலமாகவும் இறையருளை அதிகமாக நாம் பெற்றுக் கொள்கிறோம்.
இதேபோன்று அதிக உன்னதமான திருவிழாவாக தேர்த்திருவிழா நடைபெறும் அவ்வேளை எமது கைகளினால் சந்தர்ப்பத்தை அடைகிறோம்.
இக்காலங்களில் குளிர்மையான பாற்குடம் அக்நி வடிவமாக தீச் சட்டி காற்றின் வடிவமாகக் காவடி போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்வார்கள்.
இன்னும் சிலர் தூக்குக் காவடி எடுத்தும் பிரார்த்தனை செய்வார்கள். இம்முறை 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று 11.00 மணியளவில் தேர் வலம் நடைபெறும்.
அடியவர்கள் தினமும் நடைபெறுகின்ற நல்லருள் காட்சிகளில் கலந்து ஆன்மீக ஈடேற்றம் காணுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இசை நிகழ்ச்சிகள்
சப்பறம், தேர், தீர்த்தம் நாட்களில் பாலமுருகன், குமரன், செந்தில், பிரசன்னா குழுவின் நாதஸ்வர கச்சேரி நடைபெறும். அத்துடன் இளம் கலைஞர்களான பாலமுருகன் சரஞ்சன், செந்தில்நாதன், சபஸ்டீசன், பிரிதவிஹார் ஆகியோரின் நாதஸ்வர கச்சேரி நடைபெறும்.
சப்பரத்தன்று சாம் விஷால், ரென்ஸ்டியின் இன்னிசை கச்சேரியும் தேர் அன்று CAR PARK இல் இவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
தர்மப் பணிகள்
இதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்குகின்ற உபயகாரப் பெருமக்கள் மற்றும் அடியார்கள் அனைவருக்கும் கற்பகபதி கற்பக விநாயகப் பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.
ஆலயங்கள் பூஜைகள் மட்டுமன்றி சமுதாயச் சேவைகளும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆலய தலைவரும் ஸ்தாபகருமாகிய மு. கோபாலகிருஷ்ணன், தாயகத்தில் பல தர்மப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆலயங்கள் கட்டுவதற்கு நிதி உதவி, ஆதரவற்றவர்களுக்கு நிதி மற்றும் பலவகையான உதவிகள், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவற்றை அவர் செய்து வருகிறார்.
இந்த வகையில் ஆன்மீகச் செழிப்பும் சமூக நன்மைகளும் இளையோர், மூத்தோர் அமைப்புகளின் நாட்டமும் ஒன்று சேரும் நல்ல தலமாகவும் இந்த ஆலயம் வளர்ந்து வருகிறது.
Free Parking,
Monoux college,
190 Chingford Road,
London E 17 5 AA.




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
