வாகன விபத்துக்களில் 2419 பேர் பலி
இன்றுடன் முடிவடையும் 2021 ஆம் ஆண்டில் இதுவரை காலத்தில் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் நாடு முழுவதும் நடந்த கோர விபத்துக்களில் 2 ஆயிரத்து 325 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 697 பேர் பாதசாரிகள். 901 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் என்பதுடன் 152 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதிக்குள் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்களில் 13 ஆயிரத்து 469 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 263 பேர் படுகாயமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 216 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
