7 மூட்டைகளில் பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்ற 240 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்
7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்று சரக்குகளை ஆந்திராவில் இறக்கிய பின்பு மீண்டும் ஆலங்குளம் வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பின்னர் இரு தினங்கள் அங்கு இருந்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி நேற்று (30) வந்துள்ளார். அப்போது வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியுள்ளார். தொடர்ந்து, மாவட்ட போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் தக்காளி கூடைகளுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் தெரியவந்த விடயம்
இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
