திருநெல்வேலியில் 22 பேர் உட்பட யாழில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் இரண்டிலும் 760 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, 26 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் யாழ்ப்பாணத்தில்24 பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாட்களின் பின் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே தொற்று கண்டறியப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam