வெசாக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 24 பேர் மரணம்!
கடந்த வெசாக் காலத்தில் வீதி விபத்துக்கள் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி.) டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (01.06.2026) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2 நாட்களில், அதாவது வெசாக் பண்டிகையான மே 29 மற்றும் மே 30 ஆகிய திகதிகளில், 19 வீதி விபத்துக்கள் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கள்
அதற்கு மேலதிகமாக குறித்த இரண்டு நாட்களில் மாத்திரம் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 இருசக்கர வாகன சாரதிகள், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவர் மற்றும் ஒரு மிதிவண்டி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர்.ஒரு வாகனச் சாரதி, ஒரு பயணி என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வீதி விபத்துக்களில் 15 இருசக்கர வாகனங்கள், 3 முச்சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு லொறிகள், இரண்டு தனியார் பேருந்துகளும், ஒரு வாடகைக் காரும் சம்பந்தப்பட்டுள்ளன என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.