வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற தேடுதல்: மேலும் 24 கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்று (4) அதிகாலை மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில் மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குட்படுத்தினர்.
கஞ்சா பொதிகளின் பெறுமதி
இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 123Kg கேரள கஞ்சா முதல் கட்டமாக பொலிஸ் STF மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தொடர்ந்தும் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது மேலும் 24 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி 69மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
