24 மணி நேரமும் தயார் நிலையில் அம்புலன்ஸ் சேவைகள்
பண்டிகைக் காலங்களில் அவசர சேவைகளை வழங்க அம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அதிகாரிகளுக்கு பணிப்புரை
பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் விபத்துகள், உணவு விஷம் மற்றும் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகிறது.
விபத்துக்கள், உணவு விஷமான சம்பவங்கள் மற்றும் தொற்றாத நோய்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு துரித சேவைகளை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மஹீபால தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam