கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்தத் தடை செப்டெம்பர் 3, இரவு 8.00 மணி முதல் செப்டெம்பர் 4, இரவு 8.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்
நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, அங்குலான, இண்டிபெத்திய , கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கடுகுருண்டா ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

செத்சிறிபாய, ஹிம்புட்டான, உடுமுல்ல வீதி, மாளிகைகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்டார வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடும்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை, நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் வணிக நிறுவனங்களும் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும், நீர் விநியோகத் தடைக்காலத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO..