திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து 23 பேர் உயிரிழப்பு (Video)
கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பேருந்து கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் பேருந்தில் சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்யாவின் பல பகுதிகளில் சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்து வருகிறமையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan