பொதுஜன பெரமுண எதிர்ப்பால் 22வது திருத்தம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்வைக்கப்பட்டுள்ள 22வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல்களின் போது 22வது திருத்தச் சட்டம் தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, சரத் வீரசேகர, பொதுஜன பெரமுணவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இதன்போது திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்

அதே போன்று அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலின்போதும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் போது குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மாத்திரமே திருத்தச் சட்டத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
னினும் இரண்டரை வருடங்களின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்து காரணமாகவே பொதுஜன பெரமுண கட்சியினர் திருத்தச் சட்டம் தொடர்பில் தீவிர எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக அறியக்கிடைத்துள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் வாரம் திருத்தச் சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் அதனை நிறைவேற்றிக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது