ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Rakesh Aug 31, 2026 06:50 PM GMT
Report

இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சோசலிச முறை

அவர் மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை சீர்குலைக்கும் வகையில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டைப் படுகொலை செய்து சட்டத்தின் ஆட்சியை அரசு மீறி வருகின்றது.

ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | 22Nd Amendment Is Killing Democracy Sajith Alleges

கடந்த அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதிக்குச் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை ஸ்திரமடைந்ததாகக் கூறியது போல், தற்போதைய அரசும் விவசாயிகளை மிதித்து நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்துகின்றது.

ஜனநாயக வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கம் இதுவே. தீவிர சோசலிச முறை மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது.

அரசியல் உரிமைகள்

முதலாளித்துவத்தினாலேயே செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதால் மனிதாபிமான முதலாளித்துவமும் சமூகச் சந்தைப் பொருளாதாரமும் அவசியம்.

ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாஸ பின்பற்றிய நடுநிலைப் பாதையைப் போன்று, இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைக்க வேண்டும்.

ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | 22Nd Amendment Is Killing Democracy Sajith Alleges

நாட்டின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமே நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடியவையாக உள்ளன.

பொருளாதார, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் நீதிமன்றத்தில் சவால் விடுக்கக்கூடிய அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும்.

கந்தையா பாஸ்கரன் பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி

கந்தையா பாஸ்கரன் பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி

யோஷித மற்றும் டெய்சி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

யோஷித மற்றும் டெய்சி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US