22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை! பல குழுக்களை கடுமையாக சாடிய சுசில் பிரேமஜயந்த
22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''அடுத்த அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை நேற்று தயாரித்தேன், அது அதில் இல்லை.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை.
பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது
22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து.
22வது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன். இந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது.
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam