விடுதலைப்புலிகளின் தயாரிப்பிலான 220 குண்டுகள் மீட்பு (PHOTOS)
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 220 மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 02.03.2022 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு
அருகாமையில் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த போது நிலத்தில் புதைக்கப்பட்ட
வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாரின் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த 04.03.2022 அன்று வெடிபொருள் செயலிழக்கும் சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த பகுதி தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 220 மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.







தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
