யாழில் 22 வயதுடைய இளைஞரொருவர் கைது
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி .கொஸ்தாவின் வழிகாட்டலில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி என் எஸ்.டி.சத்திரசிங்கவின் தலைமையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அதற்கமைய நேற்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸார் வட்டு தெற்கு இன்பச்சோலை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் வட்டுக்கோட்டை பொலிஸார் 8 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 8 மின் மோட்டார் இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் வழக்கு
தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும் மேலும் பல திருட்டுக்களில் சந்தேகநபர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri