22 வயதுடைய யுவதியொருவர் கொடூரமாக கொலை! பொலிஸாரின் வலையில் சிக்கிய காதலன்
கொழும்பு - களனி ஆற்றில் 22 வயதுடைய யுவதியொருவரை கொலை செய்துவிட்டு ஆற்றில் சடலத்தை வீசிய சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் உயிரிழந்த பெண்ணின் காதலன் எனவும், அவர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு யாரும் இல்லாத சமயம் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது , வெல்லம்பிட்டிய சேதவத்தையில் பிரதேசத்தை 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கடந்த 16 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி காணாமல்போயுள்ளதாக யுவதியின் பெற்றோர் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இதன்போது சந்தேகநபரும் தனது காதலியின் பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.
இதன்போது சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,கொஹிலவத்தை பிரதேசத்தில் வைத்து யுவதி சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக யுவதியின் சடலம் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
