2020 இல் இங்கிலாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 22 பேர் படுகொலை! வெளியான தகவல்
குடும்ப தகராறு 2020ம் ஆண்டில் இங்கிலாந்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு 16 ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட 22 பேரில் 12 பேர் சிறுவர்கள் லண்டனை பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தளபதி டேவ் மெக்லாரன் கருத்து வெளியிடுகையில், “இவ்வாறான சம்பவங்களின் பின்னால் மன அழுத்தம் காரணமாக இருந்தமை தவிர்க்க முடியாதுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் ஒருவித தாக்கத்தை செலுத்தியுள்ளது. எனினும், "இந்த சம்பவங்களை பொறுத்தவரையில், முடக்கத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாக முடிவுக்கு வருவதற்கு முன்னர், அந்த மதிப்புரைகளை ஆராயவேண்டும். இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தனிநபர்களின் மன ஆரோக்கியத்தில் முடக்கலின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன்” என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, 2020 ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரான நடராஜா நித்தியகுமார், தனது குழந்தைகளான 19 மாத வயதான பவின்யா மற்றும் மூன்று வயதான நிகிஷ் ஆகியோரை கொலை செய்திருந்தார்.
இந்த கொலைக்கு மன அழுத்தமே காரணம் என கூறப்பட்டது. குழந்தைகளின் தந்தையான நடராஜா நித்தியகுமார் தொடர்ந்தும் காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல ஜூன் மாதம் Mitcham என்ற பகுதியில் வாழ்ந்து வந்த இலங்கையரான சுதா சிவானந்தம் (36) என்ற பெண், தனது ஐந்து வயது மகளான சாயாகியை கத்தியால் குத்திக்கொலை செய்திருந்தார்.
ஹரோ பகுதியில் பிரஸ்டன் வீதியில் வசித்து வந்த மரியம் பென்செய்ன் (32) என்பவர் ஜூலை மாதம் தனது ஐந்து மாத மகன் எலியாஸ் பயாட்டை கொலை செய்திருந்தார்.
அக்டோபர் மாதம், மேற்கு லண்டனில் வாழ்ந்துவந்த மலேசியத் தமிழரான குகராஜ் சிதம்பரநாதன் (42), தனது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் தனது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோரை கொலை செய்திருந்தார்.
எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, வன்முறை சம்பவங்கள் 27 சதவீதம் குறைந்துள்ளது, கொலைகள் 2019ம் ஆண்டு 150ஆக இருந்தது, இந்த எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்து கடந்த ஆண்டு 126 ஆக குறைந்துள்ளது.
முந்தைய 12 மாதங்களை விட 2020ம் ஆண்டில் 42 சதவீதம் குறைவான இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.