மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு பொதுச்சுகாதார அதிகாரி பணிமனையில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 22 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியான அன்டிஜன்,பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய தினம் புளியந்தீவு,இருதயபுரம்,வெட்டுக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு புளியந்தீவு பொதுச்சுகாதார அதிகாரி பணிமனையில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் 98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 22 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் ,புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



