வவுனியாவில் 2142 ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் (Video)
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் 2142 ஆவது நாளாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பகாக நேற்று (01.01.2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அரசியல் தீர்வு
அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது? தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுபே ஒன்றே சிறந்த வழி. நோர்வே தூதர் எரிக் சொல்கைம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம்.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வரவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
