டொக்டர் எலியந்த வைட்டின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பலத்த பொலிஸ் பாதுகாப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக மருத்துவராக கடமையாற்றி வந்த அமரர் எலிந்த வைட்டின் பிள்ளைகள் இருவருக்கும் 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பாதுக்க (Niroshan Paadhuka) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஆன்மீக சக்தியின் மூலம் நோய்களை குணப்படுத்துவதாக கூறி வந்த டொக்டர் வைட், பிரதரமர் மஹிந்தவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்காகி டொக்டர் வைட் உயிரிழந்தார். இவ்வாறான ஓர் நிலையில் அவரது மகனும்,மகளும் தற்பொழுது தந்தை கனவில் மருந்துகள் பற்றி கூறுவதாகவும் தங்களினால் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைட்டின் இரண்டு பிள்ளைகளுக்கும் யார் எவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் பற்றி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் 4 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 21 பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பாதுக்க தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
