ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களினால் 205 பேர் பலி
ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற விபத்துக்களினால் சுமார் 205 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1959 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துக்களினால் 205 பேர் கொல்லப்பட்டதுடன், 1254 பேர் காயமடைந்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் மட்டும் 766 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதுவே அதிக எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகியதாகவும், அடுத்தபடியாக முச்சக்கர வண்டிகள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலேயே அதிகளவு விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam