உலகின் 10 சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
உலகின் 10 சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில், 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச் சீட்டு 98வது இடத்தை பிடித்துள்ளது.
உலகின் 10 சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
முதலிடம்
ஒரு நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
பட்டியலில் இம்முறை முதலிடத்தை சிங்கப்பூரும், இரண்டாவது இடத்தை தென்கொரியாவும், மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன.
சிங்கப்பூர் கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஜேர்மனி, இத்தாலி, லக்ஸம்பர்க், ஸ்பெயில், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், பிரித்தானியா எட்டாவது இடத்திலும் கனடா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
இலங்கை கடவுச் சீட்டு
அமெரிக்கா, உலகின் 10 சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இடம் பிடிக்கவே இல்லை. அமெரிக்காவுக்கு, 12ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
அமெரிக்க கடவுச்சீட்டை பயன்படுத்தி 180 நாடுகளுக்கு பயணிக்கலாம் என்றாலும், 46 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு பயணிக்கமுடியும்.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச் சீட்டு 98வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கையின் கடவுச் சீட்டு ஆறு இடங்களால் சரிவு கண்டது.
இதேவேளை அண்மைய புதுப்பிப்பின்படி, இலங்கையர்கள் விசா இல்லாமல் 41 நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-அமல்





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
