அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றுமொரு இந்தியர்
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு இந்தியர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி என்ஜினீயரான ஹிர்ஷ் வர்தன் சிங் (வயது 38) என்பவரே குடியரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பிலான போட்டியாளர்கள்
இதனை தொடர்ந்து குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், குடியரசு கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்பட 13 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக மேலும் ஒரு இந்திய வம்சாவளியினர் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |