மாத்தறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
மாத்தறை மாவட்ட இறுதி முடிவு
மாத்தறை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 317,541 வாக்குகளை மாத்தறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 6 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 74,475 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
அத்துடன், புதிய ஜனநாயக முன்னணி 31, 009 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 686,175 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 476,407
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 454,734
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 21, 673ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மாத்தறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 352,217 வாக்குளையும் 6 ஆசனங்களையும் மாத்தறை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மாத்தறை மாவட்டத்தில் 72,740 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மாத்தறை மாவட்டத்தில் 37,136 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, மாத்தறை மாவட்டத்தில் 7,631 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
வெலிகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 46,007வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12,271 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 3,039வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சி 1,413 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,191 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கம்புருப்பிட்டிய தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் கம்புருப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37,897 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,315 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 3,629 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சி 1,110 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,028 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தெனியாய தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 41,989 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,636 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 4,536 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சி 2,444 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,660 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஹக்மன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38,638 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 10,154 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 6,290 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் கட்சி 1824 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,599 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தறை - அக்குரஸ்ஸ
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 44,128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 10,485 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 4,676 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 971 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தறை - தெவிநுவர
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,845 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,583 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சியினர் 2,711 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,336 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 47,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 8,339 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக 4,305 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,099 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24954 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2692 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக 1823 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 548 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.