திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின
திகாமடுல்ல மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி146,313 வாக்குகளை திகாமடுல்ல மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளை பெற்று அம்மாவட்டத்தில் மொத்தம் ஒரு ஆசனத்தை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி 33,632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 126,012 வாக்குளையும் 03 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 102,274 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் அம்பாறை மாவட்டத்தில் 43,319 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் கட்சியினர் அம்பாறை மாவட்டத்தில் 38,911 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
சம்மாந்துறை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 20,963 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்12,640 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9922வாக்குகளைப் பெற்றுள்ளனர்..
புதிய ஜனநாயக முன்னணி 7476வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 96,973ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை,65,587
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை63,283
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 2304ஆகும்.
பொத்துவில் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 25,055 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 22,329 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 20,325 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 17,745 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,273 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாறை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் அம்பாறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 67,540 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 22,887 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 4,314 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 2,763 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17316 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,272 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 1,899 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 1,326 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன 594 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 9 மணி நேரம் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
