வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்! மாணவர்களுக்கு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியான பெறுபேறுகள்
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், பரீட்சைக்கு விண்ணப்பித்த 323,900 மாணவர்களுள், 4616 மாணவர்கள் பரீட்சைக்கு முகம்கொடுக்கவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு முகம்கொடுத்து பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட ஏனைய 319,284 மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பினால், 27ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க முடியும்.

மேலும், வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களில் பார்வையிட முடியும் என்றும், ஏதேனும் விசாரணைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 1911, 0112 784208, 0112 784537 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri