கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...
கண்டி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 394,534 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 42.26 சதவீதமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 323,998 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 34.71 சதவீதமாகும்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 162,707 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 17.43 சதவீதமாகும்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச19, 403 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2.08 சதவீதமாகும்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,191,399 ஆகும்.
24, 153 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 933,516 ஆகும்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச 471,502 வாக்குகளை கண்டி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 50.43% சதவீதமாகும்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, கண்டி மாவட்டத்தில் மொத்தம் 417,355 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 44.64% சதவீதமாகும்.
மேலும் மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க கண்டி மாவட்டத்தில் 23,539 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 2.52% சதவீதமாகும்.
கடந்தமுறையுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 934,875 ஆகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 9,020 ஆகவும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 943,895 ஆகவும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,111,860 ஆகவும் பதிவாகியுள்ளது.
தெல்தெனிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 15,332 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 14, 817 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,192 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 795 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 50, 662ஆகும்.
1,301 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 39, 930 ஆகும். மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 41,231 ஆகும்.
ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23,658 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 19,457 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,729 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1469 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
யட்டிநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 32,909 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 19,374 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,196 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1409 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
உடுநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 33,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23,326 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10, 383 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1367 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹரிஸ்படுவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்படுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 59,456 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 50,539 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17,182 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2732 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 28,929 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 28,535 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 19,470 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 969 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கம்பளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 31,503 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 28,750 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 21,991 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,652 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
உடதும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் உடதும்பர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22,336 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17,226 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,280 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,386 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 51,003 ஆகும்.
981 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 50,022 ஆகும்.
மேலும், 61,289 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செங்கடகல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் செங்கடகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 30,655 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,851வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13,139 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,018வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 66,329 ஆகும்.
1,694 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 64,635 ஆகும்.
மேலும், 87,760 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டசாலை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் குண்டசாலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 38,452 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 27,999 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,628 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,933வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 84,868ஆகும்.
2,100 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 82,768ஆகும்.
மேலும், 106,339 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படதும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் படதும்பர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 26,788வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 29,760வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,539 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,367 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 73,133 ஆகும்.
1,796 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 71,337ஆகும்.
மேலும், 93,042 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 13,336 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 9,083 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,361 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
திலித் ஜயவீர 416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலகெதர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 15,568 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,982 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 43,498 ஆகும்.
895 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 42,603 ஆகும்.
மேலும், 54,236 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தபால் மூல வாக்கு
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 32,295 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 9,134 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |