மாத்தளை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
மாத்தளை மாவட்ட இறுதி முடிவு
மாத்தளை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 181,678 வாக்குகளை மாத்தளை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி53,200 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 1ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 13,353 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 429,991ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை297,238
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை274,601
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை22,637ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மாத்தளை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 188,779 வாக்குளையும் 04 ஆசனங்களையும் மாத்தளை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 73,955 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மாத்தளை மாவட்டத்தில் வெற்றிகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மாத்தளை மாவட்டத்தில் 7,542 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, 6,592 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
தம்புள்ளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 64206 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 13321 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 4713 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 2902 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஹப்புத்தளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் ஹப்புத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 23093 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12042 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 3256 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
லக்கல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் லக்கல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 26,687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12,172 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 2,198 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ரத்தொட்ட தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் ரத்தொட்ட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 14,492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 3,147 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2,480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37,287 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 2,341 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,773 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17123 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2201 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியினர் 954 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 637 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 11 மணி நேரம் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri
