அடுத்த வருடம் தேர்தல்! வெளியான தகவல்
அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம்பெறும். பொதுத் தேர்தல் ஒன்றையோ அல்லது ஜனாதிபதி தேர்தல் ஒன்றையோ எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீட்பதற்கான திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தல் ஒன்றையோ அல்லது ஜனாதிபதி தேர்தல் ஒன்றையோ அடுத்த வருடம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அரசியலமைப்பின் படி நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதிலிருந்து எவராலும் விடுபட முடியாது.

அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து நாம் அனைவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டுக்காக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அவ்வாறே இந்த நாட்டை மீட்பதற்கான திட்டமொன்றை வகுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri