முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க தயாரா..!
தமிழ் மக்கள் மீது இரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது நாட்டை விட்டும் நாட்டிற்குள்ளும் உயிர் அச்சத்தில் அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
2022ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு தமிழ் மக்கள் உட்பட பலரும் மீண்டும் புலம் பெயர்வதை தொடர்கின்றனர்.
பொதுவாகவே தமிழ் மக்கள் நினைவேந்தல் நாட்கள் தவிர்த்து பல விடயங்களில் ஒன்றிணைவது இல்லை என்பதே இவ்வாறானதொரு நிலைமைக்கு காரணமாக அமைகின்றது.
எனவே, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் கொள்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு விடயமே தமிழ் பொது வேட்பாளர் ஆகும்.
இதுவரை காலமும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வாக்களித்திருந்த போதிலும் இம்முறை மாற்றம் ஏற்படுமா என்னும் கேள்விகளுக்கு மத்தியில் வருகின்றது கீழ்வரும் காணொளி,