மகிந்த கட்சியின் நிதியமைச்சரே ரணில்: ஜனாதிபதியை மிரட்டும் நாமல்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இன்று பிற்பகல் தனது வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பார்க்கும்போது கடந்த வரவு செலவு திட்டத்திலும் ஜனாதிபதி பல பிரச்னைகளை முன்வைத்த நிலையில் அவை நிறைவேற்றப்படவில்லை என்பதனால் அவை மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம்
“ஒரே விடயத்தை இரண்டு முறை படித்தால், அடிமட்ட அளவிலான நடைமுறையில் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா?" என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.

எனவே இவ்வருட வரவுசெலவுத் திட்டமும் அதுபோன்ற பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட அறிவிப்பாக இருக்குமா என காத்திருக்கிறோம்.
எதிர்வரும் காலங்களில் இதை ஆய்வு செய்து, நாடாளுமன்ற விவாதத்தில் எங்களது யோசனைகளை முன்வைப்போம். ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா என்பதை பார்ப்போம்.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சராக அவர் வந்துள்ளார். அப்படியானால், வரவு செலவு திட்டங்களில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும். அவை நடைமுறையில் செயல்படுத்தப்படாவிட்டால் அவை பயனற்றவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam