2023 உள்ளூர் அதிகார சபை தேர்தல்: திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
2023 உள்ளூர் அதிகார சபை தேர்தல் குறித்தான விடயங்கள் அடங்கிய அறிவித்தல் உரிய உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று தொடக்கம் எதிர்வரும் 20 ம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடிவதுடன் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 18 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி நண்பகல் 12 மணிவரை மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 உள்ளூர் அதிகாரசபைகள்
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகள் காணப்படுவதுடன் அந்தந்த பிரிவுகளிற்கான வாக்காளர் இடாப்பு உரிய உள்ளுராட்சி நிறுவனங்களில் பார்வைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் (பதில் கடமை) மேலும் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் மொத்தமாக 303775 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர்
ஒருவருக்கு 1500 ரூபாவும் சுயேட்சை குழுவொன்றின் வேட்பாளரொருவருக்கு 5000 ரூபா
என்றவாறு கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



