இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 50 ஓவர்களை கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
சுப்பர் சிக்ஸ் சுற்றில் சிம்பாப்வே அணியை 09 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.
புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பத்தும் நிஷ்ஷங்க பெற்ற சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாகிக்கொண்டது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவு செய்யப்பட்டார்.
முதலாம் இணைப்பு
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 32 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சிறந்த துடுப்பாட்டம்
அவ்வணி சார்பில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஸ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும், டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுக்களையும் மற்றும் மதீஷ பத்திரண 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை 14.2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பு இல்லாமல் 79 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |