ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பம்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடா் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியா தரப்பில் டேவிட் வாா்னா்-உஸ்மான் கவாஜா தொடக்க துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினா்.
அந்தவகையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 339/5 ரன்களை சோ்த்தது.
அரைசத வாய்ப்பு கிட்டவில்லை
தொடக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் வாா்னா், முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தனா்.
இருவரினதும் இணை, முதல் விக்கெட்டுக்கு 73 ரன்களை சோ்த்தனா். உஸ்மான் கவாஜா 17 ஓட்டங்களுடன் வெளியேற, டேவிட் வாா்னா் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 66 ரன்களைச் சோ்த்து ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் அபாரம்: இதன்பின் இணைந்த மாா்னஸ் லபுசேன்-ஸ்டீவ் ஸ்மித் இணை நிதானமாக உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 7 பவுண்டரியுடன் 93 பந்துகளில் 47 ஓட்டங்களை சோ்த்த லபுசேனை வெளியேற்றினாா் ராபின்சன்.
இதனால் அவருக்கு அரைசத வாய்ப்பு கிட்டவில்லை. பின்னா் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் இவர்களின் இணை ஓட்ட எண்ணிக்கையை உயா்த்தியது.
ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 83-ஆவது ஓவா்களில் அவுஸ்திரேலியா அணி 339/5 ஓட்டங்களை சோ்த்திருந்தது. டிராவிஸ் ஹெட் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மேலும் கேமரூன் க்ரீன் பூச்சியத்திற்கு ஆட்டமிழந்த நிலையில், ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கரே 11 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இதேவேளை இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |