அரசியல்வாதிகள் பலர் சென்ற போதும் சஜித் மீது மாத்திரம் தாக்குதல்! சந்தேகம் வெளியிடும் பாதுகாப்பு செயலாளர் (Photos)
காலிமுகத்திடலில் சஜித் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஏதாவது காரணங்கள் இருக்கும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு பல அரசியல்வாதிகள் சென்றிருந்தனர்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சென்றபோது மோசமாக தாக்கப்பட்டார்.
ஆனால் வேறொரு அரசியல் கட்சியின் தலைவர் சென்ற போது தாக்கப்படவில்லை.
அப்படியென்றால் இதன் பின்னணியில் ஏதாவது காரணங்கள் இருக்கும்.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சென்ற போது அவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனை நாம் ஒருபோதும் அனுதிக்கப்போவதில்லை. அவர் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர்.
ஆகவே அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை எம்மால் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam