இலங்கை தமிழ் வர்த்தகரின் மர்ம கொலை:இந்திய தொலைக்காட்சியில் வெளியான தகவல்கள்
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் தொடர்பில் இந்திய தொலைக்காட்சியான WION சிறப்பு ஆய்வு நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையைச் சுற்றியுள்ள மர்மமான காரணங்கள் மற்றும் பல வெளிவராத தகவல்களை இந்திய தொலைக்காட்சியான WION சிறப்பு ஆராய்வு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்
கொலையைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் ஆகியனவும் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலை, நாட்டில் தீர்க்கப்படாத மிகவும் சிக்கலான வழக்குகளில் ஒன்றாகும்.
பொது வெளியில் பரவலாக பேசப்பட்ட மற்றும் தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்ற போதிலும், சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும், பொலிஸாரால் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
WION தொலைக்காட்சி வழங்கிய நிகழ்ச்சியில், வழக்கை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

தமிழ் தொழிலதிபரான 52 வயதான தினேஷ் ஷாப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam