புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18.12.2022) நடைபெற்றது.
2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் விநியோகத்தில் பிரச்சினை
கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆசிரியரினால், வினாத்தாள் விநியோகத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையினால் தமது பிள்ளைகளுக்கு அநீதிக்கு இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
