உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல்!
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான சர்வதேச சங்கத்தின் தலைவர் அஜித் தர்மபால இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்றைய தினம் (16.03.2023) இணையத்தள செய்திச் சேவை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போதைய நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பிணையில் வெளிவரும் அவரை படுகொலை செய்வதற்கான சதியொன்றை அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பொன்றும் வேறு தரப்பொன்றும் மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் முழுமையான பின்னணித் தகவல்களை அறிந்த ஒரே நபர் ஹாதியா மட்டுமே. அவரைப் படுகொலை செய்வதன் மூலமாக முக்கியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் அழிக்கப்படலாம். எனவே, அவருக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
அல்லது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அஜித் தர்மபால தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
