நாடு முழுவதும் 2000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன:அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்
நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழத்துள்ள லட்சத்திற்கும் மேற்பட்டோர்
கோதுமை மா, முட்டை ஆகிய மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த தொழிலை நம்பி வாழ்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெதுப்பக தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.
தற்போது மிகப் பெரியளவில் நடத்தப்படும் வெதுப்பகங்களில் சிறிய எண்ணிக்கையிலான வெதுப்பகங்களே இயங்கி வருகிறன. கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரிய வெதுப்பகங்களுக்கு மாத்திரம் கோதுமை மாவை விநியோகித்து வருவதால், கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவை இயங்கி வருகின்றன எனவும் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள்
இதனிடையே கோதுமை மா பிரச்சினை காரணமாக பாண் உட்பட வெதுப்பாக உணவுகளின் விலை அதிகரித்துள்ளதால், சிற்று்ண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களை நடத்தி செல்ல முயாது பெரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
