2000 உக்ரைனிய அசோவ் படையினர், ரஷ்யாவிடம் சரணடைந்தனர்! மரியுபோல் ரஷ்யா வசம்!(காணொளி)
உக்ரைன், மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவலர்கள் தம்மிடம் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது
இதனையடுத்து சரணடைந்த உக்ரைனிய துருப்பினரை ரஷ்யர்கள், பேரூந்துகளில் ஏற்றிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோலில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்குண்டிருந்த உக்ரைன் படையினரே கிரெம்ளின் படைகளிடம் சணரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.
இதனை சரணடைவைத் தொடர்ந்து மரியுபோல் நகர் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
முன்னதாக, குறித்த ஆலையில் இருந்த சுமார் 1,700 படையினர், தங்கள் ஆயுதங்களை களைந்திருக்கலாம் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் சரணடைந்தவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆலையில் இருந்து மேலும் பல உக்ரைன் படையினர் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோவ் படைப்பிரிவு உக்ரைனில் 2014 இல் ஒரு தன்னார்வப் போராளியாக அமைக்கப்பட்டு தற்போது ஒரு தேசிய காவலர் பிரிவாக உள்ளது,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 20 மணி நேரம் முன்

முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்... News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
