2000 ஏக்கர் காணிகள் மோசடி! தமிழ் அதிகாரிகளின் பெயர்கள் அம்பலம்(Video)
குறைந்தது 5 பிள்ளைகளை வைத்துக்கொண்டு காணி இன்றி சாதாரண மக்கள் தவிக்கும் போது மட்டக்களப்பு வாழ் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரிகள் பணம் மற்றும் பல மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நீதி அமைச்சரால் கொண்டுவரப்படட காணி பதிவு சம்பந்தமான திருத்த சட்டங்கள் அதேபோன்று அட்டவணை தத்துவங்கள் சம்பந்தமான திருத்தம் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.இது காலத்திற்கு தேவையானது.
இப்போது மக்கள் எம்மிடம் அதிகமாக முன்வைக்கும் குறைப்பாடாக காணி பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு கிடைக்குமென நம்புகின்றேன்.
ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி காணி பதிவு சம்பந்தமான திருத்த சட்டங்களுக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் வழங்குவதை பார்க்க கூடியதாக உள்ளது.
இந்த திருத்தும் நடைமுறைக்கு வரும் போது மட்டக்களப்பு மோசடிகள் முடிவுக்கு வரும் என நினைக்கின்றேன்.”என கூறியுள்ளார்.