திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாகும் 200 வருட பழைமையான பிள்ளையார் ஆலயம் (Photos)
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64ஆம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு பகுதியும் பௌத்த துறவிகளால் விசேட பூசைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூசைகள் இன்றைய தினம் (07.04.2023) நடைபெற்றுள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா கூறியுள்ளார்.

பௌத்த விகாரை
200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைத்து அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் காணப்பட்ட இடத்தை இந்துக்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட பௌத்த துறவிகள், இன்றைய தினம் அப்பகுதியைச் சுத்தம் செய்து கிரியைகளை மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2 வருடத்திற்கு முன் இவ்விடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கி விகாரை அமைக்கப்படுகிறது.
200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயத்தைக் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam