ஐரோப்பிய எல்லையில் காத்திருக்கும் 20 இலங்கையர்கள்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20 இலங்கையர்கள் உக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனை விட்டு வெளியேறி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் குறித்த எல்லைக்கு அருகில் அவர்கள் உள்ளதாக, அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் நோக்கில் போலந்து ஊடாக பயணிப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களையும் ஏனையோரையும் போலந்து ஊடாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக எம்.ஆர். ஹசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
