அடுத்தாண்டு அறிமுகமாகும் இலத்திரனியல் கடவுச்சீட்டு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்திருந்ததாக குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கல் மூலம் கிடைத்த வருமானம்
அதேவேளை கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதிகளை வழங்க அறவிடப்பட்ட கட்டணங்கள் மூலம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கடந்த ஆண்டு 20.1 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் 18.05 பில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை விட மேலதிகமான வருமானத்தை பெற முடிந்தது.
இரட்டை குடியுரிமை வழங்குதல் மற்றும் விமான நிலைய சேவைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் இந்த வருமானத்தை பெற முடிந்தது.
இதனிடையே எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தற்போது விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு நவீனமயப்படுத்தப்பட்டு, இலத்திரனியல் வகை கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான தொழிற்நுட்ப குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட உள்ளன எனவும் எனவும் ஹர்ச இலுக்பிட்டிய கூறியுள்ளார்.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
