இரண்டு வருடங்களை கடந்த போராட்டம்: மயிலத்தமடு பண்ணையாளர்களின் கோரிக்கை
தமது போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்தாண்டியில் போராட்ட இடத்தில் நேற்று(06.09.2025) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும் கூறுகையில்,
“மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. இந்த அறவழிப் போராட்டத்தின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் குறைவு.
அரசாங்கத்திற்கு அழுத்தம்
மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து இருபத்து ஐந்து ஹெக்டயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதன் பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறினார்கள்.
இந்நிலையில், இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த இந்தப் போராட்டம், அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நாம் நினைக்கின்றோம்.
எங்களுக்கு ஒரு தீர்வைத் தருமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




