கஞ்சா விற்க முயன்ற இரு பொலிஸார் கைது
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸார் கஞ்சா விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் மதுவரி திணைக்கள பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்றிரவு (23.03.2023) இடம்பெற்றுள்ளது.
மதுவரி திணைக்களத்தின் செயற்பாடு
விசேட மதுவரித் திணைக்கள பிரிவினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புதுக்காட்டுப் பகுதியில் உள்ள அரச விடுதி ஒன்றில் இருந்தவாறு பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு பொலிஸாரிடம் 50 கிலோ கிராம் கஞ்சாவை பெறுவதற்கு பேரம் பேசியுள்ளனர்.
அதன்பின் அவர்களது இருப்பிடத்திற்கு அழைத்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும்போது பொலிஸாரிடம் 2.250 கிலோ கிராம் கஞ்சா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் இருவரும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
