புதுக்குடியிருப்பில் சூட்சுமமான முறையில் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கான் கசிப்புக்களுடன் இரண்டு வீட்டு உரிமையாளர்களுமே நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை மேற்கொண்டு வரும் நபர்கள் சிலர் தொடர்பிலும் மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கமையவே பொலிஸாரின் உதவியுடன் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இடத்துக்குச் சென்று இரண்டு காணிகளுக்குள் இரண்டு கான் கசிப்புக்களுடன் அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் அதிகரித்துள்ளதோடு குடும்ப வன்முறைகளாலும் பலர் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.



சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri