இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து! இருவர் பரிதாப பலி
அரலகங்வில – தெஹியத்தகண்டிய பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேஹேரகலயில் இருந்து அரலங்வில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
உயிரிழப்பு
இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களின் செலுத்துநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
21 மற்றும் 55 வயதுடைய ருஹூனுகம மற்றும் அரலகங்வில ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri