எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் பேச்சுவார்த்தை
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தின இணக்கம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்று (31.10.2025) நாடாளுமன்றத்தில் சிறப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றதோடு இரண்டு மணிநேரம் இந்த கலந்துடையால் நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

மரணத்துக்கு அஞ்சுபவன் அல்ல
பொலிஸ் மா அதிபர் பிரயந்த வீரசூரிய எனது பாதுகாப்பு கோரல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கு தனது கவலையை வெளியிட்டார். எங்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கருத்துக்கள் தெரிவித்தோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ஏன் விலக்கிக் கொண்டீர்கள் என்ற விடயம் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
எனக்கு பாதுகாப்பு வழங்கப்படா விட்டாலும் நான் பயப்படபோவதில்லை.மரணத்துக்கு அஞ்சுபவன் அல்ல என்றார்.